தேடல் விடியல் தரும்




தேடல் ஓர் மந்திர சொல் ஆம் இதனை  தினந்தோறும்  ஜெபிக்க  வேண்டியது  இல்லை, ஜெயம் வேண்டுபவர்கள்  தினம்தோறும்  செயல்படுத்த வேண்டியது.  பாக்டீரியா முதல்  பகுத்தறிவு படைத்த மனிதன்  வரை  அனைத்து ஜீவன்களுக்கும் எப்போதும் எதாவது  ஒன்றை  தேடிக்கொண்டு தான் இருக்கின்றன.


உணவில் தொடங்கி  இறுதியில் உறையும் இடம் வரை இந்த தேடல் நீண்டு கொண்டே  போகிறது.




இனத்திற்கு இனம் இந்த தேடல் மாறுபட்டு கொண்டே இருகிறதே தவிர,  எதாவது ஓரி வகையில் தேடல் இருந்துகொண்டே இருக்கிறது. தேடப்படும் பொருளும் விதமும்  அதன் நோக்கமும் வேண்டுமானால்  வேறுபட்டதாய்  இருக்கலாம் ஆனால் தேடல் என்பது ஒன்றுதான்.




இருப்பவன் இல்லாததை தேடுகிறான், இல்லாதவன் இருப்பை  தேடிக்கொண்டு இருக்கிறான். தேடல் என்றுமே முற்றுப்பெறாது, காரணம்   தேவைகள். தேவைகள் எப்போது  நிறைவேறுகிறதோ  அப்போதுதான் தேடல் நிறைவு பெறும். தேவைகளும் தேடல்களும் இந்த வியக்ஞான  உலகின் தவிக்க முடியாத சாரம்சங்கள்.
        
                "சிகரங்கள் அழைக்கின்றன
                 உன் சிறகுகளை சிக்கெடுத்துக்கொள்
    
                 சொற்பதுரமே சென்றுவிட்டு
                 சொர்க்கம் தெரியவில்லை என
                 திரும்பி விடாதே"
                                      -பிழைகளில் இருந்து-(pilaigal.blogspot.com)




இறுதி வரை முயற்சி செய்து தேடுகிறவன் அதன் பலனை அடைகிறான், மீண்டும் அதனை மேம்படுத்த அடுத்த தேடலை தொடங்குகிறான். தேடலை கை விடுகிறவன் தன்னால் இயலவில்லை என்பதை ஒப்புகொள்கிறான், சிலர் அவன் தேடிய பொருள் தன்னால் காணமுடியாததால் அப்படி  ஒன்று இல்லவே இல்லை என்றும் வாதிடுகிறான்.




மின்விளக்கு கண்டுபிடிக்கும்  தேடலில்  பலமுறை முயன்று தோற்று  இறுதியாக  வென்றார்  என்று நான் கூறுகிறோம்.  ஆனால் அவர் அதனை தோல்வியாக கருத வில்லை. 




"நான் 10 , ௦௦௦௦௦000 முறைகளில் தேடிகண்டு பிடித்தேன், ஆனால் அவைகள்  ஒன்றுமே சரியாக வேலை செய்யவில்லை" என்கிறர். இதனை  நேர்மறை  அணுகுதல் என்பர்.      ௦௦௦  




அழிந்துவிடும் என்றாலும் நம்மையே அழித்துவிடும் என்றாலும் அணு  ஆயுதம் போன்ற பல விஞ்ஞான தேடல்களை நாம் செய்துகொண்டு
இருகிறோம்.




           "களை எடுப்பதாய் சொல்லி    
            பயிர்களை அழித்திடும் இந்த
            யுத்த நெறிகள் "
                     -பிழைகளில் இருந்து-(pilaigal.blogspot.com)




நம் இனம் அழிக்க நாமே ஆயுதம் தேடுகிறோம், ஏன் நாமே ஆயுதமாகவும்  மாறுகிறோம்.  சில நேரங்களில் தேடல் அறிவோடு ஆபத்தையும்  கொடுத்துக்கொண்டு  தான் இருக்கிறது. தேடலின் நோக்கம் குலம் காப்பவையாக இருக்கவேண்டும், அளிக்கக் கூடியதாக இருக்க கூடாது. இதனை நான் பகுத்துணர்வால் உணரவேண்டும்.

இணையத்தின் தேடல் இன்று இந்த உலகை அறிய பேருதவி செய்து கொண்டு இருக்கிறது. கணிப்பொறியில் வல்லுனரான தன்  மகனிடம்  வீதிக்கு வெளியே மலை பொழிகிறதா என கேட்டாராம், மேதாவி  மகன் அன்னையின்  கேள்விக்கு பதில் தேடி இணையத்தில் தட்பவெட்ப  சுழல்  பற்றிய  தகவலை  தேடிக்கொண்டு இருந்திருக்கிறான். மகன் ஏதோ முக்கிய  வேலையாக இருக்கிறார் என்றெண்ணி  சன்னல்  திறந்து  மழை பெய்வதை உறுதி செய்கொண்டர், ஆனால் மகனோ  சிறிது நேரம் கழித்து களைத்து இந்த நேரம் வெளியில் மழை பெய்து கொண்டு இருக்க வேண்டும் என்று  கூறினான்.  இந்த சிறிய எடுத்துகாட்டு  என்ன சொல்கிறது என்பது இந்த நேரம் நம் மூளைக்கு எட்டி இருக்கும். மழை பெய்கிறதா என பார்க்க  சன்னல் திறந்து பார்த்தாலே போதும். எந்த ஒரு தேடலும் நாம் அறிவை வளர்பதாய் இருக்கவேண்டுமைத்  தவிர  மழுங்க  செய்வதாய் இருக்க  கூடாது.
            
ஒரு சில நேரங்களில் நமது தேடலின் வேகம் நாம் என்ன தேடுகிறோம் என்பதையே மறக்கச் செய்துவிடும். வேகத்தின் முன்  வேகத்தை  நிறுத்தினால்  வேகத்தோடு  விவேகமும் பயணிக்கும், பொறுமை  கலந்த நிதானம் நம் தேடலை நல்விதமாய்  நிறைவடைய  செய்யும்  என்பது என் கருத்து.




நற்தேடலை தொடங்குவோம், தீமைஇல்லாதோர் உலகை நம் எதிர்கால சந்ததிக்கு பரிசளிப்போம்.




---
என்றும் அன்புடன் உங்கள் சகா
**பயமறியான்**