களவும் கற்று ???

சகாக்களுக்கு!!


வணக்கத்துடன் உங்கள் அன்பன்.

அன்னையின் கருவறையில் இருந்து இந்த பூலக ஜனனத்தின் போது நாம் எதையும் கற்றுக்கொண்டு பிறக்கவில்லை; ஆனால் அத்தனையும் கற்றுக் கொள்ள  பிறந்திருக்கிறோம்.

என்ன செய்த காரணத்தால் நாம் மனிதனாய் பிறந்தோம்? முற்பிறவியில்  செய்த பாவமா?  புண்ணியமா?;  முற்பிறவி  என்று  ஒன்று  உண்டா? இப்படி எல்லாம் சில விதண்ட  வாத  விளக்கம்  தேவை  இல்லாத  கேள்விகளை நமக்குள்ளே கேட்டு கொண்டே இருந்தால் நிச்சயம் விடை   கிடைக்கும்;ஆனால் அது நமது காலத்திற்கு பின்னரும் அறியப்படலாம். பின்னர் நாம் வாழ்ந்து என்ன பயன்?

எது எப்படியோ;இன்று மனிதனாய் இந்த பூமியில்.என்ன செய்ய  போகிறோம். எத்தனையோ விசயங்கள் இருகின்றன நாம் கற்றுக்கொள்ள.

கற்க தயாராய் இருங்கள். கற்றுக்கொள்ளும்  ஒவ்வொரு  விசயத்தையும் ஆழமாய்  கற்றுக்கொண்டு மனதில் புதைத்து வைக்காதீர்கள்; விதைத்திடுங்கள்,அது நிச்சயமாய் நல்ல விளைச்சலை நமக்கில்லை என்றாலும் நம் தேசத்திற்கு கொடுக்கும். கற்றவைகளை கற்றதோடு இல்லாமல் மேற்கொண்டு மற்றவர்கள் கற்க புதிய  முறைகளை  உருவாக்குவோம்.


கற்றவைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். புதிதாய்  கற்கவும் தயங்காதீர்கள்; ஏனெனில் தயக்கம்  மற்றவர்களை  அல்ல  தன்னையே அழித்துவிடும். தெரியாததை தெரியாது  என தெரிந்து கொண்டு தெரிந்து கொள்ள முயலுங்கள்.


கற்றல் என்பது  வெறும்  புத்தகங்களால்  மட்டும்  நிறைவு  பெற்றுவிடாது. 


                         " பக்கம் பக்கமாய் 
                            புரட்டியது புத்தகத்தை 
                            காற்று - என்ன 
                            படித்து இருக்கும் " 


தெரு வீதிகளில் சில நண்பர்கள் வாசகம் பொறித்த சட்டைகளை  அணிவதை கண்டு இருக்கிறேன். அதில் ஒன்று " நான் பிறக்கும் போது அறிவாளியாக  பிறந்தேன்; இந்த கல்வி  என்னை  முட்டாளாக  மாற்றிவிட்டது "  என்று. 


இதில் எவ்வளவு மெய்மையும் பொய்மையும் கலந்து இருக்கிறது என்று ஒரு தனி விவாதமே நடத்தலாம். 


பிறப்பால் நமது கற்றுகொள்ளும் விருப்பத்திற்கு  எந்த ஒரு எல்லையும்  இல்லை; இந்த பரந்து  விரிந்த உலகை போல. நாம் தான் நமக்கென்று ஒரு எல்லையை உருவாக்கி கொள்கிறோம்.   


பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஒரு பாடப்பிரிவை எடுத்து  படிக்கும்  மாணவர் சமுதாயம் பெரும்பாலும் மற்ற பாடப்பிரிவை பற்றி தெரிந்து கொள்ளவே மறுக்கிறார்கள். நம்மவர்கள் தனக்கென ஒரு வட்டத்தை  உருவாக்கி கொண்டு  அதற்க்கு மேற்பட்ட விசயங்களை தனக்கு உரியது இல்லை, தேவை இல்லாதது, அதற்கும் நமக்கும் எந்த வித தொடர்பும்   இல்லை என்ன ஒதுங்கிவிடுகிறார்கள், ஏதோ குற்றம் போல்.  இவர்களது கற்றல் ஒரு வட்டதிற்குல்லே அடங்கி விடுகிறது. இவர்கள்  தான்  மேற்கூரிய கருத்துக்கு சொந்தக்காரர்கள் என்று நினைக்க தோன்றுகிறது.


அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விசயம்,  நாம்  கற்றுகொள்ளும்   எந்த  ஒரு விசயமும் வீணாய் போவது இல்லை;  நிச்சயம் அது நமக்கு இல்லை என்றாலும் நம்மை சார்ந்தவனக்கு பேருதவியாய்  இருக்கும். 


இந்த மனித இனம் என்ன கற்றது ?  என்பதை பார்த்தோம் , என்ன கற்கிறது என்பதை பார்த்து கொண்டு இருகிறோம் ?? என்ன கற்க  போகிறது???   என்பதையும் பொறுதிருந்து பார்ப்போம் நாமும்  கற்றுக்கொண்டே......,     


கற்ற  அறிவு பகிர்ந்து கொள்ளும் போதுதான் அதன் ஆற்றல் பெருகுகிறது; நாமும் பெருக்குவோம் நமது அறிவையும் ஆற்றலையும்...,


ஆதலால் " களவையும் கற்று  - கற்பிப்போம்"    


அன்புடன்

பயமறியான்

என்னை பற்றி:--

பெயர் : தீனா (எ) முருகன்
பிறப்பு : 7 செப் 1985
படிப்பு : இளங்கலை பட்டதாரி
தாய் மண் :  அலங்காநல்லூர்
                        மதுரை (மா)








வாழ்நாள் லட்சியம்:       இளைய சமுதாயத்தில் யாரும் பொருளாதார
                                                   தடையினால் கல்வியை கை விட்டவராக
                                                   இருக்ககூடாது.  இலக்கை  நோக்கி  என் 
                                                   பயணம்  இனி உங்களுடன்..............,

இலக்கின் வலைப்பூ  :   http://payamariyaan.webs.com


 எனது பிழைகள்          : http://pilaigal.blogspot.com