தேடல் விடியல் தரும்




தேடல் ஓர் மந்திர சொல் ஆம் இதனை  தினந்தோறும்  ஜெபிக்க  வேண்டியது  இல்லை, ஜெயம் வேண்டுபவர்கள்  தினம்தோறும்  செயல்படுத்த வேண்டியது.  பாக்டீரியா முதல்  பகுத்தறிவு படைத்த மனிதன்  வரை  அனைத்து ஜீவன்களுக்கும் எப்போதும் எதாவது  ஒன்றை  தேடிக்கொண்டு தான் இருக்கின்றன.


உணவில் தொடங்கி  இறுதியில் உறையும் இடம் வரை இந்த தேடல் நீண்டு கொண்டே  போகிறது.




இனத்திற்கு இனம் இந்த தேடல் மாறுபட்டு கொண்டே இருகிறதே தவிர,  எதாவது ஓரி வகையில் தேடல் இருந்துகொண்டே இருக்கிறது. தேடப்படும் பொருளும் விதமும்  அதன் நோக்கமும் வேண்டுமானால்  வேறுபட்டதாய்  இருக்கலாம் ஆனால் தேடல் என்பது ஒன்றுதான்.




இருப்பவன் இல்லாததை தேடுகிறான், இல்லாதவன் இருப்பை  தேடிக்கொண்டு இருக்கிறான். தேடல் என்றுமே முற்றுப்பெறாது, காரணம்   தேவைகள். தேவைகள் எப்போது  நிறைவேறுகிறதோ  அப்போதுதான் தேடல் நிறைவு பெறும். தேவைகளும் தேடல்களும் இந்த வியக்ஞான  உலகின் தவிக்க முடியாத சாரம்சங்கள்.
        
                "சிகரங்கள் அழைக்கின்றன
                 உன் சிறகுகளை சிக்கெடுத்துக்கொள்
    
                 சொற்பதுரமே சென்றுவிட்டு
                 சொர்க்கம் தெரியவில்லை என
                 திரும்பி விடாதே"
                                      -பிழைகளில் இருந்து-(pilaigal.blogspot.com)




இறுதி வரை முயற்சி செய்து தேடுகிறவன் அதன் பலனை அடைகிறான், மீண்டும் அதனை மேம்படுத்த அடுத்த தேடலை தொடங்குகிறான். தேடலை கை விடுகிறவன் தன்னால் இயலவில்லை என்பதை ஒப்புகொள்கிறான், சிலர் அவன் தேடிய பொருள் தன்னால் காணமுடியாததால் அப்படி  ஒன்று இல்லவே இல்லை என்றும் வாதிடுகிறான்.




மின்விளக்கு கண்டுபிடிக்கும்  தேடலில்  பலமுறை முயன்று தோற்று  இறுதியாக  வென்றார்  என்று நான் கூறுகிறோம்.  ஆனால் அவர் அதனை தோல்வியாக கருத வில்லை. 




"நான் 10 , ௦௦௦௦௦000 முறைகளில் தேடிகண்டு பிடித்தேன், ஆனால் அவைகள்  ஒன்றுமே சரியாக வேலை செய்யவில்லை" என்கிறர். இதனை  நேர்மறை  அணுகுதல் என்பர்.      ௦௦௦  




அழிந்துவிடும் என்றாலும் நம்மையே அழித்துவிடும் என்றாலும் அணு  ஆயுதம் போன்ற பல விஞ்ஞான தேடல்களை நாம் செய்துகொண்டு
இருகிறோம்.




           "களை எடுப்பதாய் சொல்லி    
            பயிர்களை அழித்திடும் இந்த
            யுத்த நெறிகள் "
                     -பிழைகளில் இருந்து-(pilaigal.blogspot.com)




நம் இனம் அழிக்க நாமே ஆயுதம் தேடுகிறோம், ஏன் நாமே ஆயுதமாகவும்  மாறுகிறோம்.  சில நேரங்களில் தேடல் அறிவோடு ஆபத்தையும்  கொடுத்துக்கொண்டு  தான் இருக்கிறது. தேடலின் நோக்கம் குலம் காப்பவையாக இருக்கவேண்டும், அளிக்கக் கூடியதாக இருக்க கூடாது. இதனை நான் பகுத்துணர்வால் உணரவேண்டும்.

இணையத்தின் தேடல் இன்று இந்த உலகை அறிய பேருதவி செய்து கொண்டு இருக்கிறது. கணிப்பொறியில் வல்லுனரான தன்  மகனிடம்  வீதிக்கு வெளியே மலை பொழிகிறதா என கேட்டாராம், மேதாவி  மகன் அன்னையின்  கேள்விக்கு பதில் தேடி இணையத்தில் தட்பவெட்ப  சுழல்  பற்றிய  தகவலை  தேடிக்கொண்டு இருந்திருக்கிறான். மகன் ஏதோ முக்கிய  வேலையாக இருக்கிறார் என்றெண்ணி  சன்னல்  திறந்து  மழை பெய்வதை உறுதி செய்கொண்டர், ஆனால் மகனோ  சிறிது நேரம் கழித்து களைத்து இந்த நேரம் வெளியில் மழை பெய்து கொண்டு இருக்க வேண்டும் என்று  கூறினான்.  இந்த சிறிய எடுத்துகாட்டு  என்ன சொல்கிறது என்பது இந்த நேரம் நம் மூளைக்கு எட்டி இருக்கும். மழை பெய்கிறதா என பார்க்க  சன்னல் திறந்து பார்த்தாலே போதும். எந்த ஒரு தேடலும் நாம் அறிவை வளர்பதாய் இருக்கவேண்டுமைத்  தவிர  மழுங்க  செய்வதாய் இருக்க  கூடாது.
            
ஒரு சில நேரங்களில் நமது தேடலின் வேகம் நாம் என்ன தேடுகிறோம் என்பதையே மறக்கச் செய்துவிடும். வேகத்தின் முன்  வேகத்தை  நிறுத்தினால்  வேகத்தோடு  விவேகமும் பயணிக்கும், பொறுமை  கலந்த நிதானம் நம் தேடலை நல்விதமாய்  நிறைவடைய  செய்யும்  என்பது என் கருத்து.




நற்தேடலை தொடங்குவோம், தீமைஇல்லாதோர் உலகை நம் எதிர்கால சந்ததிக்கு பரிசளிப்போம்.




---
என்றும் அன்புடன் உங்கள் சகா
**பயமறியான்**





                 









                       
                     
              

முயலாமை

சகாக்களுக்கு வணக்கத்துடன் உங்கள் சகா!!

பழைய கதைதான் ஆனாலும் பல மாற்றங்களை கொடுக்கும் கதை.

ஒருநாள் முயலுக்கும்  ஆமைக்கும் ஒரு  குறிப்பிட்ட  இலக்கை நோக்கி  ஓட்டப்  பந்தயம்  நடந்ததாம், போட்டி துவங்கிய  உடனே தனது  வேகத்தை காட்டியதாம் முயல்.  ஆமையும்   தனது வேகத்தை காட்டத்துவங்கியதாம். ஒருசில  மணித்துளிகளில்  முயல் கிட்டத் தட்ட இலக்கை நெருங்கிய போது ஆமை எங்கே வருகிறது என  திரும்பி பார்க்க தன் விழிபடலம் எட்டும் வரை ஆமையை  காணததால் கண்ணை  மூடி சிறிது (?) இளைப்பாறியதாம். அந்த  நேரத்தில்  ஆமை இலக்கை அடைந்துவிட்டது. வெற்றியும் பெற்றதாக அறிவிக்கப்பட்டதாம்.

இந்த இடத்தில நாம் இருந்தால் முயலாக இருக்க  விரும்புவோமா இல்லை  ஆமையாக இருக்க விரும்புவோமா.  எப்படியோ ஆமை இலக்கு வரை இளைப்பாறாமல் முயன்றதால் வென்றது. நாமும் அப்படிதான் இந்த யுகத்தில் இருக்க வேண்டியுள்ளது.

வாழ்கையில் இது போன்ற நிறைய போட்டிகளை சந்திக்கப் போகிறோம். ஒரு வேலை இந்த முயலுக்கும் ஆமைக்கும் இணை ஒருமுறை போட்டி நடந்தால் இந்த முயல் இதே இளைப்பாறலைக் கை விட்டாலோ அல்லது ஆமை முயல் இளைப்பாறும் நாம் இன்னும் வேகத்தை (?) குறைத்து செல்லலாம் என இறுமாப்பு கொண்டலோ ? விளைவு எப்படி இருக்கும்.

 " வெற்றிக்கு பின் ஓய்வு எடுக்காதே
  காத்து கொண்டு இருகின்றன
  அனேக உதடுகள் -  உனது வெற்றி
  அதிட்டதால் வந்தது
  என்று சொல்ல - நீ அடுத்த முறை
 தோற்றால்!!" - நடிகர் அஜித் குமார்

 ஆம் உண்மைதான். ஒருவனது வெற்றியை வாழ்த்துவதை விட பழிக்க அநேகம்  பேர் உள்ளனர்.  நாம்  முயலாக இருந்தாலும் ஆமையாக இருந்தாலும் நமது இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும், முயலமையால் மடிந்து விடக் கூடாது.

ஒருவனது வெற்றி மற்றொருவனது தோல்வியில்தான் அடங்கி உள்ளது. ஒவொரு  தோல்வியையும் கொண்டாடுங்கள் வெற்றியைபோல.  ஏனெனில் தெரிந்தோ  தெரியாமலோ   அது நம்மை வெற்றியை நோக்கி முன்னேற தூண்டுகிறது.

                                                                                                                                                                            " தேடுபவனுக்குத்தான்  தெருக்களின்  குப்பையில் உள்ள இரும்பு துகள் கூட கிடைக்கும், இல்லாவிட்டால் அதுவும் கேள்விக்குறிதான்."               




" முயற்சிக்காக வாழ்பவர்களை விட, உழைத்து களைத்தவர்களை விட முயலமையால் மடிந்தவர்களே அதிகம், இது மிருக  வாழ்வைவிட  கேவலமானது . "

" உன்னால் முடியாது என்று சொல்லபடுவதை, எங்கோ  யாரோ  ஒருவன்  செய்து கொண்டுதான் இருக்கிறான்"என்கிறார் டாக்டர்.அப்துல் கலாம். இது உண்மை  தான்,  எவனோ ஒருவன் செய்து முடிப்பதை  ஏன்  நம்மால் செய்ய முடியாது.

உலக போரின் போது மாவீரன் அலெக்ஸாண்டர் தனது சொத்துகளை  எல்லாம்  தன்  படை பரிவாரங்களுக்கு எழுதி கொடுத்துவிட்டனாம், அமைச்சர்  வினவியபோது  இதைவிட  அதிகமான  சம்பாத்தியத்தை  கொடுக்கும் நம்பிக்கையும் உள்ளது  என கூறி முயற்சியில் இறங்கினான் என்பது வரலாறு. எனது நோக்கம் வெற்றி அல்ல, தோல்வி அடைய கூடாது என்பதே என பல வெற்றிகள் பெற்றான்.

நாமும் நம்பிக்கையுடன் முயல்வோம்.................வெல்வோம்!

--
என்றும் அன்புடன் உங்கள் சகா
பயமறியான்
                

களவும் கற்று ???

சகாக்களுக்கு!!


வணக்கத்துடன் உங்கள் அன்பன்.

அன்னையின் கருவறையில் இருந்து இந்த பூலக ஜனனத்தின் போது நாம் எதையும் கற்றுக்கொண்டு பிறக்கவில்லை; ஆனால் அத்தனையும் கற்றுக் கொள்ள  பிறந்திருக்கிறோம்.

என்ன செய்த காரணத்தால் நாம் மனிதனாய் பிறந்தோம்? முற்பிறவியில்  செய்த பாவமா?  புண்ணியமா?;  முற்பிறவி  என்று  ஒன்று  உண்டா? இப்படி எல்லாம் சில விதண்ட  வாத  விளக்கம்  தேவை  இல்லாத  கேள்விகளை நமக்குள்ளே கேட்டு கொண்டே இருந்தால் நிச்சயம் விடை   கிடைக்கும்;ஆனால் அது நமது காலத்திற்கு பின்னரும் அறியப்படலாம். பின்னர் நாம் வாழ்ந்து என்ன பயன்?

எது எப்படியோ;இன்று மனிதனாய் இந்த பூமியில்.என்ன செய்ய  போகிறோம். எத்தனையோ விசயங்கள் இருகின்றன நாம் கற்றுக்கொள்ள.

கற்க தயாராய் இருங்கள். கற்றுக்கொள்ளும்  ஒவ்வொரு  விசயத்தையும் ஆழமாய்  கற்றுக்கொண்டு மனதில் புதைத்து வைக்காதீர்கள்; விதைத்திடுங்கள்,அது நிச்சயமாய் நல்ல விளைச்சலை நமக்கில்லை என்றாலும் நம் தேசத்திற்கு கொடுக்கும். கற்றவைகளை கற்றதோடு இல்லாமல் மேற்கொண்டு மற்றவர்கள் கற்க புதிய  முறைகளை  உருவாக்குவோம்.


கற்றவைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். புதிதாய்  கற்கவும் தயங்காதீர்கள்; ஏனெனில் தயக்கம்  மற்றவர்களை  அல்ல  தன்னையே அழித்துவிடும். தெரியாததை தெரியாது  என தெரிந்து கொண்டு தெரிந்து கொள்ள முயலுங்கள்.


கற்றல் என்பது  வெறும்  புத்தகங்களால்  மட்டும்  நிறைவு  பெற்றுவிடாது. 


                         " பக்கம் பக்கமாய் 
                            புரட்டியது புத்தகத்தை 
                            காற்று - என்ன 
                            படித்து இருக்கும் " 


தெரு வீதிகளில் சில நண்பர்கள் வாசகம் பொறித்த சட்டைகளை  அணிவதை கண்டு இருக்கிறேன். அதில் ஒன்று " நான் பிறக்கும் போது அறிவாளியாக  பிறந்தேன்; இந்த கல்வி  என்னை  முட்டாளாக  மாற்றிவிட்டது "  என்று. 


இதில் எவ்வளவு மெய்மையும் பொய்மையும் கலந்து இருக்கிறது என்று ஒரு தனி விவாதமே நடத்தலாம். 


பிறப்பால் நமது கற்றுகொள்ளும் விருப்பத்திற்கு  எந்த ஒரு எல்லையும்  இல்லை; இந்த பரந்து  விரிந்த உலகை போல. நாம் தான் நமக்கென்று ஒரு எல்லையை உருவாக்கி கொள்கிறோம்.   


பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஒரு பாடப்பிரிவை எடுத்து  படிக்கும்  மாணவர் சமுதாயம் பெரும்பாலும் மற்ற பாடப்பிரிவை பற்றி தெரிந்து கொள்ளவே மறுக்கிறார்கள். நம்மவர்கள் தனக்கென ஒரு வட்டத்தை  உருவாக்கி கொண்டு  அதற்க்கு மேற்பட்ட விசயங்களை தனக்கு உரியது இல்லை, தேவை இல்லாதது, அதற்கும் நமக்கும் எந்த வித தொடர்பும்   இல்லை என்ன ஒதுங்கிவிடுகிறார்கள், ஏதோ குற்றம் போல்.  இவர்களது கற்றல் ஒரு வட்டதிற்குல்லே அடங்கி விடுகிறது. இவர்கள்  தான்  மேற்கூரிய கருத்துக்கு சொந்தக்காரர்கள் என்று நினைக்க தோன்றுகிறது.


அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விசயம்,  நாம்  கற்றுகொள்ளும்   எந்த  ஒரு விசயமும் வீணாய் போவது இல்லை;  நிச்சயம் அது நமக்கு இல்லை என்றாலும் நம்மை சார்ந்தவனக்கு பேருதவியாய்  இருக்கும். 


இந்த மனித இனம் என்ன கற்றது ?  என்பதை பார்த்தோம் , என்ன கற்கிறது என்பதை பார்த்து கொண்டு இருகிறோம் ?? என்ன கற்க  போகிறது???   என்பதையும் பொறுதிருந்து பார்ப்போம் நாமும்  கற்றுக்கொண்டே......,     


கற்ற  அறிவு பகிர்ந்து கொள்ளும் போதுதான் அதன் ஆற்றல் பெருகுகிறது; நாமும் பெருக்குவோம் நமது அறிவையும் ஆற்றலையும்...,


ஆதலால் " களவையும் கற்று  - கற்பிப்போம்"    


அன்புடன்

பயமறியான்

என்னை பற்றி:--

பெயர் : தீனா (எ) முருகன்
பிறப்பு : 7 செப் 1985
படிப்பு : இளங்கலை பட்டதாரி
தாய் மண் :  அலங்காநல்லூர்
                        மதுரை (மா)








வாழ்நாள் லட்சியம்:       இளைய சமுதாயத்தில் யாரும் பொருளாதார
                                                   தடையினால் கல்வியை கை விட்டவராக
                                                   இருக்ககூடாது.  இலக்கை  நோக்கி  என் 
                                                   பயணம்  இனி உங்களுடன்..............,

இலக்கின் வலைப்பூ  :   http://payamariyaan.webs.com


 எனது பிழைகள்          : http://pilaigal.blogspot.com